செர்பியாவின் ஆளும் செர்பிய முற்போக்குக் கட்சிக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது.
வன்முறை, அமைதியின்மையை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குற்றஞ்சாட்டி தலைநகர் பெல்கிரேடில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆளும் செர்பிய கட்சியின் அலுவலகங்களை இடித்து போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் செர்பிய கட்சி அலுவலகங்களின் ஜன்னல், கதவு உள்ளிட்டவை சேதமடைந்தன. இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவியது.