ஒரு குடும்பத்தில் முதல் இரண்டு குழந்தைகளும் பெண்ணாக இருந்தால், அடுத்துப் பிறக்கும் குழந்தைகள் பெண்ணாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளதாக ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒரு குடும்பத்தில் ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் பிறப்பது அதிர்ஷ்டமா? அறிவியலா? என்ற கோணத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஆய்வில் ஈடுபட்டது.
இந்த ஆய்வுக்காக 1956 மற்றும் 2015-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவில் பிறந்த பெண் செவிலியர்களின் பிறப்பு சான்றிதழ்கள் ஆராயப்பட்டது.
அதன்படி, இரண்டு குழந்தைகள் மட்டும் இருக்கும் குடும்பத்தில் ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் இருப்பது மிகவும் பொதுவானதாக இருந்தது.
3 அல்லது 4 குழந்தைகள் உள்ள வீட்டில் முடிவுகள் நேர் எதிராக இருந்தது. அதாவது, முதல் இரண்டு குழந்தைகள் ஆணாக இருந்தால் , 3-வது குழந்தையும் ஆண் குழந்தையாகவே பிறந்துள்ளது.
அதேபோல் தான், முதல் இரண்டு குழந்தைகள் பெண்ணாக இருந்தால், மூன்றாவதும் பெண் குழந்தையாகவே இருந்துள்ளது என்பதை ஹார்வர்டு பல்கலைக்கழகம் சுட்டிக்காட்டியுள்ளது.