மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் வெப்பச்சலனம் காரணமாக மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ரத்னகிரி, ராய்காட், தானே, பால்கர் ஆகிய பகுதிகளில் விடிய விடியக் கனமழை பெய்தது. இதனால் தாதர் ரயில் நிலையத்தில் இருப்புப்பாதை முழுவதும் மழைநீரில் மூழ்கியது.
இதேபோல், முக்கிய சாலைகளிலும் தண்ணீர் அதிகளவு தேங்கியதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.