சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஊராட்சி செயலாளரை பணியிட மாற்றம் செய்யுமாறு கிராம சபை கூட்டத்தை மக்கள் புறக்கணித்தனர்.
சந்திரபிள்ளை வலசு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அப்போது 35 ஆண்டுகளாக ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருபவரை பணி மாற்றம் செய்யுமாறு மக்கல் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பொதுக் கழிப்பிடம், தெருவிளக்கு, சாக்கடை வசதி, குடிநீர் வசதி, உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருவதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.