தென்காசியில் பலமுறை புகார் கொடுத்தும் அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றித் தரவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காடுவெட்டி ஊராட்சி சார்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த கூட்டத்தை அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் புறக்கணித்தனர். தங்களுக்கான எந்தவொரு அடிப்படை வசதிகளையும் அதிகாரிகள் செய்து தரவில்லை எனவும் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.