டெல்லியில் தெரு நாய் பிரச்சனை பூதாகரமாகி இருக்க, கேரள மாநிலத்தில் தெரு நாய்க்குச் சிலை வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
டெல்லியில் தெரு நாய்களை 8 வாரங்களுக்குள் பிடித்து காப்பகங்களில் அடைத்துப் பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இது விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கேரள மாநிலம் கொழிவெட்டும்வெலி பகுதியில் கடந்த 12 ஆண்டுகளாக மக்களோடு ஒன்றிணைந்து வாழ்ந்த எல்தோ என்ற தெருநாய்க்குக் கிராம மக்கள் சிலை வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊர் மக்கள் மீது அளப்பறிய பாசம் கொண்டிருந்த எல்தோ நாய், கடந்த மாதம் மரணித்தது. தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே எல்தோ நாயை பாவித்து வளர்த்த மக்கள், அதனை என்றும் நினைவு கூறும் வகையில் நாய்க்குச் சிலை வைத்துள்ளனர்.
மேலும், ஊரில் உள்ள கடை ஒன்றில் கேக் ஒன்றுக்கு எல்தோ கேக் எனப் பெயரிட்டு தங்கள் நன்றியை வெளிப்படுத்தியுள்ளனர்.