இத்தாலியில் உள்ள மவுண்ட் எட்னா எரிமலையில் நெருப்பு குழம்பு வெளியேறி வரும் ட்ரோன் காட்சி வெளியாகி உள்ளது.
இத்தாலி நாட்டின் கிழக்கு கடலோரப் பகுதியான சிசிலியில் அமைந்துள்ள எட்னா எரிமலை கடல் மட்டத்தில் இருந்து 11 ஆயிரத்து 165 அடி உயரம் கொண்டது.
ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய எரிமலை என்று எட்னா அழைக்கப்படுகிறது. இந்நிலையில் எட்னா எரிமலையில் இருந்து ஆறுபோல் நெருப்பு குழம்பு வெளியேறும் ட்ரோன் வீடியோ வெளியாகி உள்ளது.