மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் அருகே ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
பீகார் நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று, பர்த்வான் அருகே நளா ஃபெர்ரி என்ற இடத்தில் சாலையில் வந்து கொண்டிருந்த டிரக் மீது பயங்கர வேகத்தில் மோதியது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 10 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 35 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.