பாகிஸ்தானில் நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாகிஸ்தானில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக கைபர் பக்துன்க்வா மாகாணம் கனமழையில் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளது. குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததாதல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போயுள்ளது.
பசியால் வாடும் மக்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் விழிபிதுங்கி நிற்க, மறுபுறம் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.
இந்நிலையில், சாங்கி பண்டா பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் அங்கு ஹெலிகாப்டரில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன.
ஆனால், தரையிறங்க முயன்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாகக் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் பயணித்த 5 பேரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.