விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வட்டாட்சியர் மிரட்டுவதாக முன்னாள் ராணுவ வீரர் புகார் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் செட்டிகுறிச்சியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முன்னாள் ராணுவ வீரர் மணிகண்டன் என்பவர், செட்டிகுறிச்சி கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதாகவும், அவற்றை அகற்றுமாறு கூறினார் கைது செய்து விடுவேன் என வட்டாட்சியர் மிரட்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதனைதொடர்ந்து பேசிய ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனக் கூறினார்.