திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து சக பணியாளர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 5
500 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் மாலா என்பவர் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர் வழக்கம் போல பணியிலிருந்தபோது செவிலியர் மீரா என்பவர் தூய்மைப் பணியாளர் மாலாவை அழைத்துள்ளார்.
இதை அவர் கவனிக்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த அரசு செவிலியர், தூய்மை பணியாளர் மாலாவைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சக தூய்மை பணியாளர்கள், பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.