கோவை ரத்தினபுரியில் விஷ்வ ஹிந்து பரிசத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பு மற்றும் பஜ்ரங்தள் அமைப்பு இணைந்து நடத்திய இந்த பெருவிழாவில் பொதுமக்கள் தங்களின் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமணிந்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
13வது ஆண்டாக நடத்தப்பட்ட இவ்விழாவில் மேளதாளத்துடன் மாணவர்களின் நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் கோவை முழுவதும் உள்ள பொதுமக்கள் பங்கேற்றனர்.