மேற்கு வஙகத்தில் The Bengal Files படத்தின் ட்ரெய்லரை தடுத்து நிறுத்திய சம்பவத்திற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நமது வரலாற்றின் சில பக்கங்கள் வேண்டுமென்றே கிழிக்கப்பட்டு மறைக்கப்பட்டன. நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளுக்குப் பிறகும், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் நிலைமை அப்படியே உள்ளது.
இன்று, திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களும் மாநில காவல் துறையும் கொல்கத்தாவில்
#The Bengal Files இன் டிரெய்லரை திரையிடுவதை நிறுத்தியுள்ளனர்.
திரிணாமுல் காங்கிரஸ் உண்மையை என்றென்றும் புதைக்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் அதை எவ்வளவு அதிகமாக அடக்குகிறீர்களோ, அவ்வளவு சத்தமாக அது எழும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.