சென்னை மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் பவுண்டேஷன் தொடங்கப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட காலத்தில் தனி ஒரு மனிதனாய், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள கொடிக் கம்பத்தில் ஏறி, பிரிட்டிஷ் கொடியை கீழே இறக்கி, மூவர்ணக் கொடியை ஆர்யா ஏற்றினார்.
எதற்கும் அஞ்சாமல் வெள்ளையர்களுக்கு எதிராக போராடிய, சுதந்திர போராட்ட வீரர் ஆர்யா பெயரில் பவுண்டேஷன் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கான, தொடக்க விழா சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது. இதில், ஆர்யா சுரேஷ், வேணுகோபால், சங்கர் கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர்கள், இளைஞர்களிடையே தேச பக்தியை வளர்ப்பதற்காக சுதந்திரப் போராட்ட தியாகி ஆர்யா பவுண்டேஷன் என்கிற பெயரில் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.