ஆடிமாத திருவிழாவை ஒட்டி சென்னை அம்பத்தூர் அருகே உள்ள படவட்டம்மன் கோயிலில் 1008 பால்குடம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
பாடியில் உள்ள இந்த கோயிலில் ஆண்டு தோறும் நடத்தப்படுவதுபோல இந்த ஆண்டும் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டது. முன்னதாக மேள தாளம் முழங்க ஊர்வலமாக வந்த பக்தர்கள் 1008 பால்குடத்தை சுமந்தவாறு சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இதனையடுத்து அம்மனுக்கு அபிஷேகம் நிறைவடைந்தவுடன் இரண்டாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது அருள் வந்தபடி ஆடிய பெண் ஒருவரை பணியில் இருந்த போலீசார் அப்புறப்படுத்தினர்.