போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் அலாஸ்காவில் கடந்த 15-ம் தேதி ரஷ்ய அதிபா் புதினுடன் டிரம்ப் நேரடியாக பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
ஆனால், அந்தப் பேச்சுவாா்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் வெள்ளை மாளிகையில் டிரம்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று சந்திக்க உள்ளார்.
அவருடன் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா, ஜெர்மன் பிரதமர் பிரெட்ரிச் மெர்ஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் ஆகியோரும் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.