சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே திம்பம் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் வாகனங்கள் போட்டி போட்டு முந்திச் செல்ல முயன்றன.
இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக நெரிசலில் சிக்கித் தவித்தன. தொடர்ந்து போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர்.