விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாதக பொதுக் கூட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
செஞ்சிக்கோட்டையை மராட்டிய மன்னர்கள் ஆண்ட கோட்டை என அறிவித்துள்ளதை கண்டித்து செஞ்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசி கொண்டிருந்தார்.
அப்போது செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு அனுமதி மறுத்த பவுன்சர்கள் தாக்க முற்பட்டனர். இதையடுத்த மேடையில் பேசிக் கொண்டிருந்த சீமான் கீழே ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.