தேங்காய் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் தேனி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வருசநாடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அதிகளவு தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் போதிய மழை இல்லாததால் தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளது.
இதனால், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேங்காயின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தேங்காய் 68 ரூபாய்க்கும் ஒரு டன் 68 ஆயிரம் ரூபாய்க்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.