கிருஷ்ணகிரி அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் செண்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கந்திக்குப்பம் பகுதியில் காரின் முன்சக்கரம் வெடித்தது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே உள்ள இரும்பு தடுப்பில் மோதியது. நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில், விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.