திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில் 2ஆம் நாள் தெப்ப திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 14ஆம் தேதி ஆடி கிருத்திகை விழா கோலாகலமாக தொடங்கிய நிலையில், நாள்தோறும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழச்சியான தெப்ப திருவிழாசரவண பொய்கை குளத்திற்கு விமரிசையாக நடைபெற்றது. .
சரவண பொய்கை குளத்தில் மின் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானுக்கு சிறப்பு ஆரத்தி சேவை செய்யப்பட்டது. பின்னர், சரவணப் பொய்கை குளத்தில் முருகப்பெருமான் ஐந்து முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தெப்ப திருவிழாவின் 2ஆம் நாள் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.