எண்ணுர் முகத்துவாரத்தில் எண்ணெய்க் கழிவுகள் கலந்து வருவதால் வாழ்வாதாரம் பாதிப்படைவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பக்கிங்காம் கால்வாய் வழியாக ஆற்றுப்படுகையில் எண்ணெய்க்கழிவுகள் கலந்து வருவதால் தண்ணீர் கருமை நிறத்தில் காட்சியளிக்கிறது.
இதனால் மீன்கள் இறந்து கரை ஒதுங்கிய நிலையில் தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.