திண்டிவனம் அருகே இளைஞர் கொலை வழக்கில் முன்னாள் காதலி மற்றும் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் பாதிரி பகுதியில் கடந்தாண்டு மார்ச் மாதம் ஆண் சடலம் கிடந்தது. கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த இளைஞர் தேனி மாவட்டம் எரதி மங்கலத்தைச் சேர்ந்த ஜோதி மணி என்பது தெரியவந்தது.
முன்னாள் காதலி உமாவிற்குத் திருமணமான நிலையில் ஜோதிமணி தொடர்ந்து தொல்லை செய்ததால் அவரைக் கொலை செய்தது அம்பலமானது. இதுதொடர்பாக உமா மற்றும் அவரது பெற்றோர் மாரியப்பன், பஞ்சவர்ணத்தை போலீசார் கைது செய்தனர்.