நாட்றம்பள்ளியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழா ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. நாட்றம்பள்ளி விநாயகர் கோயிலில் இருந்து பேருந்து நிலையம் வரை விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஊர்வலமாகச் சென்றனர்.
அப்போது, கிருஷ்ணர், ராதை வேடமணிந்த குழந்தைகள் மழையையும் பொருட்படுத்தாமல் ஊர்வலமாகச் சென்றனர். பெண்களும் மழையில் நனைந்தபடி உற்சாகத்துடன் கோலாட்டம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பின்னர், நாட்றம்பள்ளி ராமகிருஷ்ண மடத்தில் நடந்த விழாவில் ஆன்மீக சொற்பொழிவாளர் சுவாமி சமாஹிதானந்தர் கலந்துகொண்டு குழந்தைகளுக்குப் பரிசுகளை வழங்கினர்.