வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் சுற்றித்திரிந்த காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
இப்பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதாக கூறப்படும் நிலையில் குண்டலபள்ளியில் உள்ள விவசாய நிலத்தில் காட்டு யானை ஒன்று புகுந்தது.
மக்களை அச்சுறுத்திய இந்த காட்டு யானை பயிர்களை சேதப்படுத்தியது. இது குறித்து அறிந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடிக்க செய்து யானையை காட்டுக்குள் விரட்டினர்.