நாற்றம்பள்ளி அருகே அஞ்சலில் வந்த ஆதார் அட்டைகள் மற்றும் கடிதங்கள் புதருக்குள் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் சுரக்கல் நத்தம் பகுதியில் அஞ்சல் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில் ஆற்றுப் படுகை ஓரம் புதருக்குள் ஆதார் அட்டைகள், வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் அரசு மூலம் அனுப்பப்பட்ட கடிதங்கள் கிடந்தன.
இதுகுறித்து அஞ்சலக ஊழியரிடம் கேட்டபோது, ஆவணங்கள் இருந்த பை தொலைந்ததாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் கூறினார்.
ஆனால், அதுபோன்ற புகார் எதுவும் வரவில்லை என போலீசார் தெரிவித்தனர். எனவே அலட்சியத்துடன் செயல்பட்ட ஊழியர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.