கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருக்கோவிலூர் நகராட்சி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில், திருக்கோவிலூர் ஒன்றிய செயலாளர் தீர்த்தமலை உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் ஊர்வலம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.