சேலம் தனியார் நிறுவனத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் மத்தியில் வன்முறை தூண்டும் வகையில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், சூரமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 18வது நாளாகத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலாளர்களைச் சந்தித்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ஆதரவு தெரிவித்தார். பின்னர் தொழிலாளர்கள் மத்தியில் பேசிய அவர், தனியார் நிறுவனம் 100 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தாலும் ஒரு கிலோ இரும்பை கூட இங்கிருந்து எடுத்துச் செல்ல முடியாது எனத் தெரிவித்தார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி பின்னால் லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர் என்றும், போராட்டத்திற்குத் தேதி குறித்தால் 5 ஆயிரம் பேரை இறக்கி தர்ணாவில் ஈடுபடுவோம் எனவும் கூறினார்.
மேலும், வன்முறையைத் தூண்டும் வகையில் வேல்முருகன் பேசியதால் காவல்துறையினர் மற்றும் உளவுத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.