கூடலூர் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கூடலூர் பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள மாயாற்றின் தரைபாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
மாயாற்றின் தரைபாலத்தை மூழ்கியப்படி தண்ணீர் செல்வதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், மாயாற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.