மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனுக்கு ஈரோட்டில் பாஜக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பச்சப்பாளி பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் இல.கணேசனுக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.எம்.செந்தில் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் பங்கேற்று இல.கணேசன் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.