மாநில கல்விக் கொள்கையில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தின் ஒருபகுதியாகக் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இதுகுறித்து பேசியவர்,
தமிழக அரசு வெளியிட்ட மாநில கல்விக் கொள்கையில் தமிழுக்கு முக்கியத்துவம் இல்லை என்றும் தமிழை வைத்து ஆட்சிக்கு வந்த திமுக, அந்த தமிழுக்காக எதையும் செய்யவில்லை என்று அன்புமணி குற்றம்சாட்டினார்.
தனியார் நிறுவனங்களில் 75% வேலைவாய்ப்பு உள்ளூர் இளைஞர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம் ஏன் இல்லை?” என்று கேள்வி எழுப்பியவர், 2026 தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாகக் கூட வரக்கூடாது என்றும் அனைத்து சமூக மக்களும் தேர்தலில் திமுகவைப் புறக்கணிக்க வேண்டும் என அன்புமணி கூறினார்.