உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் நிறுத்தாமல் சென்ற சொகுசு காரை தடுத்த நிறுத்த முயன்ற ஊழியர்கள் மீது காரை ஏற்ற முயன்ற சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.
சம்பவத்தன்று மீரட் பகுதியில் உள்ள சுங்கச்சாவடி வழியாக SUV ரக கார் ஒன்று நிற்காமல் கடந்து சென்றது. அப்போது பணியிலிருந்த ஊழியர்கள் மற்றும் காவலர்கள் அந்த காரை தடுத்து நிறுத்த முயன்றனர்.
ஆனால் நிற்காமல் சென்ற கார் ஓட்டுநர் மீண்டும் சுங்கச்சாவடி நோக்கி காரை அதிவேகமாக இயக்கி ஊழியர்கள் மீது மோத முயன்றார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தெறித்து ஓடினர். இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் போலீசார் சமப்வம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.