ஜம்மு-காஷ்மீரின் பந்திபோராவில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 2 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
வடக்கு காஷ்மீரின் பந்திபோராவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் கூட்டாகத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பந்திபோரா பகுதியில் பதுங்கியிருந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்பில் இருந்த 2 பேரைப் பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து சீன கையெறி குண்டுகள், ஏகே ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளைப் பறிமுதல் செய்தனர்.
பின்னர், இருவர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.