தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்தேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
பொது வாழ்வில் அவரது நீண்ட கால சேவை மற்றும் பல்வேறு துறைகளில் அவர் பெற்ற அனுபவம் நமது தேசத்தை வளப்படுத்தும். அவர் எப்போதும் வெளிப்படுத்திய அதே அர்ப்பணிப்புடனும், உறுதியுடனும் தேசத்திற்கான அவரது சேவை தொடரட்டும்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.