கிட்னி திருட்டு தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் கைத்தறி தொழிலாளர்களைக் குறிவைத்து நடைபெற்ற கிட்னி திருட்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, பரமக்குடியைச் சேர்ந்த சத்தீஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு செய்தார்.
அப்போது, கிட்னி திருட்டு என்பது மிகப்பெரிய பிரச்சனை என்பதால் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என உத்தரவு பிறப்பித்தனர்.