மதுரையில் மாநகராட்சியுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், போராட்டம் தொடரும் எனத் தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து அவர்கள், அவர்லேண்ட் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரியும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களுடன் மாநகராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தைத் தொடர்ந்துள்ளனர். தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்றும் தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.