மிஸ் யூனிவர்ஸ் இந்தியாவாக ராஜஸ்தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா கிரீடம் சூடி அசத்தியுள்ளார்..
தாய்லாந்தில் நவம்பர் 21-ம் தேதி 74வது மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ள அழகியை தேர்வு செய்வதற்கான மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியின் இறுதிச் சுற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கோலாகலமாக நடைபெற்றது.
இதில், ராஜஸ்தானை சேர்ந்த மணிகா விஸ்வகர்மா என்பவர் வெற்றி பெற்று கீரீடம் சூடினார். அவருக்கு மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024-ன் வெற்றியாளர் ரியா சிங்கா கிரீடம் சூட்டினார்.
முன்னதாக போட்டியில் பங்கேற்ற அழகிகள், பாடலுக்கு நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.