கோவையில் சிறுவனின் தொண்டையில் சிக்கிய மிட்டாயை லாவகமாக எடுத்த ரயில்வே போலீசாருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
மேட்டுப்பாளையம் – போத்தனூர் இடையிலான மெமு ரயிலில் தேவ் ஆதிரன் என்ற 2 வயது சிறுவன் பயணித்துக் கொண்டிருந்தான்.
அப்போது மிட்டாய் தொண்டையில் சிக்கிக் கொண்டதில் சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பணியில் இருந்த ரயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டு மிட்டாயை அகற்றி சிறுவனின் உயிரைக் காப்பாற்றினர்.