இருதரப்பு உறவுகளிலும் ஏற்பட்ட கடினமான காலகட்டத்துக்கு பிறகு, இந்தியாவும் – சீனாவும் தற்போது முன்னேற வேண்டும் என, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
சீன வெளியுறவுத்துறை அமைச்சரான வாங் யி, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவலின் அழைப்பின் பேரில் டெல்லி வந்துள்ளார். இந்நிலையில் அவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கரை சந்தித்தார். அப்போது, இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய ஜெய்சங்கர், இந்தியா நேர்மையான, சமமான மற்றும் பலமுனை உலக வரிசையை எதிர்பார்ப்பதாக கூறியதுடன், சர்வதேச அமைப்புகளிலும் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய சூழலில், உலக பொருளாதாரத்தை மேம்படுத்துவதும், ஸ்திரத்தன்மையை பேணுவதும் தேவை என்று வலியுறுத்தினார்.
மேலும், பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் எதிர்த்து போராடுவது நமது கடமை என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.