தெலங்கானாவில் பெய்துவரும் கனமழை காரணமாக பழமை வாய்ந்த வனதுர்க பவானி கோயிலை வெள்ளம் சூழ்ந்ததால் பக்தர்கள் அச்சத்திற்குள்ளாகினர்.
தெலங்கானாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சிங்கூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
இதன் எதிரொலியாக மஞ்சீரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, இடுப்புலபாயா நகரில் அமைந்துள்ள வனதுர்கா பவானி கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் கோயிலின் நிலை குறித்து பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்.