பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா அதிகாரப்பூர்வ இணையதளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மூன்றரை கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்டத்தை சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அறிவித்தார்.
சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டம் கடந்த 1-ம் தேதி முதல் 2027-ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தனியார் உற்பத்தி துறையில் முதன் முறையாக பணியில் சேரும் ஊழியர்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வீதம் ஊக்கத் தொகையாக இரண்டு தவணையாக 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
இந்நிலையில், பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் செயல்பாட்டுக்கு வந்ததுள்ளதாகவும், அதில் ஊழியர்களின் விபரங்களையும், நிறுவனத்தின் விபரங்களையும் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.