ஓமனைத் தாக்கிய புழுதி புயலால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகின் பல்வேறு நாடுகளில் வெப்பம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் வெப்பத்தின் அளவு புதிய உச்சம் தொட்டு வருகிறது.
அதோடு புழுதி காற்றும் வீசி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இந்த நிலையில், ஓமனைப் பயங்கர புழுதி புயல் தாக்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் வாகனங்களை ஓட்டி சென்றனர்.