ஸ்பெயினில் பலத்த காற்றால் அதிவேகமாகப் பரவும் காட்டுத் தீயால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேசெரெஸ் மாகாணத்தில் அமைந்துள்ள வனப் பகுதிகளில் காட்டு தீ ஏற்பட்டது. இந்த காட்டுத் தீ மளமளவென பரவி வருவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.
மேலும் காற்றின் தரம் மோசமடைந்ததால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.