நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்பிக்கள் கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிமுகம் செய்யப்பட்டார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஏராளமான எம்.பிக்கள் பங்கேற்று இருந்தனர். அப்போது குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனைப் பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார்.
பின்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்குப் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை போர்த்தியும் பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இவரைத் தொடர்ந்து அங்கிருந்த அனைவரும் வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.