சென்னை தலைமைச் செயலகத்தில் காக்கும் கரங்கள் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முன்னாள் படை வீரர்களின் நலனுக்காக முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க 1 கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து இந்த திட்டத்தின் மூலம் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.