அரிதான மற்றும் தீவிரமான தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஐடி ஊழியருக்கு, சென்னை சிம்ஸ் மருத்துவமனை வெற்றிகரமாக சிகிச்சையளித்துள்ளது.
ஐடி ஊழியருக்கு ஏற்பட்டிருந்த புற்றுநோய் அவரது உச்சந்தலை மற்றும் மண்டையோட்டைக் கடுமையாகப் பாதிக்கும் அளவிற்கான மோசமான நிலையை எட்டியிருந்துள்ளது.
தொடர்ந்து சென்னை சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குப் பலதுறை சார்ந்த மருத்துவர்கள் குழு தொடர் சிகிச்சை அளித்து அவரை பாதிப்பிலிருந்து மீட்டுள்ளனர்.
தற்போது வழங்கப்பட்டிருக்கும் சிகிச்சையின் மூலம் ஆரோக்கியமான மற்றும் திசுக்களால் முழுமையாக நோயிலிருந்து மீண்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நோய் மீண்டும் வருவதை முன்கூட்டியே கண்டறியத் தொடர் மருத்துவப் பரிசோதனைகளும் வழங்கப்படும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.