ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்கள் உயிருடன் இருப்பது சாத்தியமற்றது என அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர் மற்றும் பலர் மாயமாகினர்.
இது குறித்துப் பேசிய ஒமர் அப்துல்லா, காணாமல் போனவர்கள் உயிருடன் இருப்பதற்குச் சாத்தியமில்லை என்றும், முடிந்தவரை அவர்கள் உடல்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்போம் எனத் தெரிவித்தார்.