ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ஹாரர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்குத் தாமா என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆதித்யா சர்போத்தர் இயக்கும் இப்படத்தில், ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடிக்கிறார்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.