இந்தோனேசியாவில் உள்ள லெவோடோபி எரிமலை, கரும்புகை மற்றும் சாம்பலை தொடர்ந்து வெளியேற்றி வருகிறது.
நுசா தெங்காரா மாகாணத்தில் லெவோடோபி லகி லகி எரிமலை உள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதம் வெடித்தது. ஆனால் தற்போது வரை கரும்புகை மற்றும் சாம்பலை வெளியேற்றி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும், பாதுகாப்பான இடங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.