இந்தியாவில் நடைபெறும் ஆசியக் கோப்பை ஆண்கள் ஹாக்கி தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் A பிரிவில் இந்தியா, ஜப்பான், சீனா, கஜகஸ்தான் அணிகளும், B பிரிவில் மலேசியா, கொரியா, வங்கதேசம் மற்றும் சீன தைபே அணிகளும் இடம்பெற்றுள்ளன.
வரும் 29ம் தேதி பீகாரின் ராஜ்கிரில் நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஓமன் அணிகளுக்குப் பதிலாக வங்கதேசம் மற்றும் கஜகஸ்தான் அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
எட்டு அணிகள் போட்டியிடும் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில் வெற்றி பெறும் அணி, அடுத்த ஆண்டு பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறும் உலகக்கோப்பைக்குத் தகுதி பெறும்.